ரிஷப ராசி அன்பர்களே …! இன்று பணவரவு சுமாராக இருக்கும். அதே போல மனதில் சஞ்சலங்கள் இருக்கும். கூட்டாளியின் போக்கு எரிச்சலூட்டும். சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவு இருக்கும். எதிலும் கவனமாக இருக்கவேண்டும். பணவரவை அதிகபடுத்துவதற்காக கடுமையாக நீங்கள் உழைக்கவேண்டி இருக்கும். பேச்சின் இனிமை சாதுரியத்தால் காரியங்கள் ஓரளவு கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். தந்தையுடன் அனுசரித்து செல்வீர்கள்.
பூர்விக சொத்துக்கள் மூலம் வர வேண்டிய லாபம் வரும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். ஆனால் பெண்கள் சமையல் செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். அதே போல உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆயுதங்களை பயன்படுத்தும் போது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப ரொம்ப கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்.
பெண்கள் தயவு செய்து நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று காதலர்கள் எந்த விதத்திலும் முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களது அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.