ரிஷப ராசி அன்பர்களே …! தனவரவு உண்டாகும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க கூடிய யோகமும் உண்டு. சாஸ்திர ஆராய்ச்சியில் தேர்ச்சி ஏற்படும். தொழில் வளம் பெருகும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு கூடும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.
கூடுதல் பொறுப்புகள் இருப்பதால் கடினமான உழைப்பை எஞ்சியிருக்கும். நிதானத்தைக் கடைபிடியுங்கள். காதலர்கள் எந்தவித வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அது மட்டுமில்லாமல் கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தினரிடம் அன்பு இருக்கும். கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.
முடிந்தால் இன்று மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப சிறப்பு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறமும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.