ரிஷப ராசி அன்பர்களே …! சிலரது பேச்சு உங்களுக்கு இன்று சங்கடத்தைக் கொடுக்கும். பொது இடங்களில் அதிகமாக பேச வேண்டாம். தொழில் வியாபார நடைமுறை சுமாராகத்தான் இருக்கும். பணம் வரவு சராசரி அளவில் இருக்கும். சுற்றுப்புற தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் தாமதமாகலாம். இன்று சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலிலும் ஓரளவு சிறப்பு இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். மேலும் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.