ரிஷப ராசி அன்பர்களே …! இன்று மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும் நாளாக இருக்கும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிக்க இயலாத நிலை உண்டாகும. குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது. வயிறு தொடர்பான நோய்கள் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறை கொஞ்சம் ஏற்படலாம். சேமித்து வைப்பது ரொம்ப நல்லது.
மாணவர்கள் இன்று கவனமாக எதிலும் ஈடுபட வேண்டும் அலட்சியம் காட்ட வேண்டாம். இன்று கூடுமானவரை செய்யும் தொழில் கொஞ்சம் கவனமாக இருங்கள். கலை துறையை சார்ந்தவர்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகம் செல்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். இருந்தாலும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம் போன்றவற்றில் எப்பொழுதுமே ஈடுபடுங்கள்.
இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பணிகளில் மட்டும் அதிக பணிச்சுமை இருந்து கொண்டே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.