Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு… ஆரோகியத்தில் கவனம்…வாக்குவாதத்தை தவிர்க்கவும்…!

 

ரிஷபம் ராசி அன்பர்களே …!   செலவு சமமாகும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகளை தாமதம் ஏற்பட்டாலும் நல்லவிதமாக முடிவடையும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனைகளை கொஞ்ச நாட்களுக்கு எதிர்பார்ப்பை குறைத்து கொள்வது ரொம்ப நல்லது. இன்று எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதும் நல்லது.

எல்லா நன்மைகளும் கிடைப்பதற்கு இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்தாலும் பின்னர் சரியாகிவிடும். முக்கியமான காரியம் ஏதாவது செய்வதாக இருந்தால் மனைவியிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். பிள்ளைகளுடைய நலனில் இன்று அக்கறை கொள்ளுங்கள். மிக முக்கியமாக உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தை தயவுசெய்து பாதுகாத்திடுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |