ரிஷப ராசி அன்பர்களே …! இன்று அக்கம் பக்கத்தினரிடம் கொஞ்சம் நெருக்கம் வேண்டாம். பேச்சில் கண்டிப்பாக நிதானம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் உள்ள அணு கூலத்தை பாதுகாக்க வேண்டும். சராசரி அளவில் பணம் வரவு வந்து சேரும். உங்களுடைய பிள்ளைகள் செய்யக்கூடிய செயல் நல்ல செயலாக இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். இன்று யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். இன்று எந்தவித வாக்குக் கொடுக்காதீர்கள்.
மிக முக்கியமாக வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொருமையாக செல்லுங்கள்.இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாகத்தான் செயல்பட வேண்டும். உடன் பணிபுரிவோர் இடம் கொஞ்சம் நிதானமாகப் பேச வேண்டும். அவரிடம் எந்த விதமான சிக்கல்களும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். நட்புடன் இருந்தால் அனைத்து விஷயங்களுமே நல்லது நடக்கும். புதிய உதவிகளை செய்யும் தோணும் ஆனால் இப்போதைக்கு வேண்டாம்.
போட்டிகளில் சாதுரியமாக சமாளித்து விடுவீர்கள். இன்று காதலர்கள் பேசும் பொழுது கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பேச்சில் நிதானம் இருந்தால் மட்டுமே எந்த வித பிரச்சினையும் இல்லாமல் இருக்கலாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.