ரிஷப ராசி அன்பர்களே …! இன்று சிறிய வேலை ஒன்று அதிக சுமையாக மாறலாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரின் ஆலோசனை உதவும். சுமாரான அளவில் பணம் கிடைக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டி இருந்தாலும் மிகவும் நன்றாகயிருக்கும். மாணவக் கண்மணிகள் தீவிர முயற்சி எடுத்து படிப்பது ரொம்ப நல்லது. கல்வி பற்றிய பயம் கொஞ்சம் இருந்துகொண்டேதான் இருக்கும்.
எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். எதிர்ப்புகள் விலகி செல்லும் தைரியம் கூடும். பணவரவும் சிறப்பாகவே இருக்கும். அது மட்டும் இல்லாமல் மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எப்போதுமே நீங்கள் எண்ண வேண்டாம். உங்களை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட கூடும், என்பதால் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். மற்றவரிடம் பேசும்போது கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். மாலை நேரங்களில் எப்போதும் போலவே நடைப்பயிற்சி மேற்கொள்வது ரொம்ப நல்லது.
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பு கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர்நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.