Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…காரிய தடைகள் விலகும்…முன்னேற்றம் உண்டு…!

ரிஷப ராசி அன்பர்களே …!   இன்று அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். பணவரவை விட செலவு தான் கூடும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை மதித்து நடப்பார்கள். இன்று துடிப்புடன் வேகமாகவே செயலாற்றுவீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். செலவுகள் அதிகமாகலாம் எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது ரொம்ப நல்லது.

சொத்து சம்பந்தமான காரிய தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மை உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய தகவல்கள் நல்ல தகவலாக இருக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். அதே போல பெண்களால் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |