ரிஷப ராசி அன்பர்களே …! இன்று வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள் ஆக இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசித்து கொடுங்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையும்.
பேச்சில் கடுமை காட்டாமல் இருப்பது நன்மையை கொடுக்கும். உச்சத்தில் இருப்பவர்கள் பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக இயந்திரங்களை இயக்கும் பொழுது ரொம்ப கவனமாக இயக்க வேண்டும். இன்று ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி பயனடைவீர்கள். அதேபோல கைத்தொழிலும் சில மாற்றங்களை செய்து முன்னேற்றம் காண்பிர்கள்.
காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.