ரிஷபம் ராசி அன்பர்களே …! இன்று நீண்ட நாட்களாக திட்டமிட்ட புனிதப் பயணங்களை பற்றிய சிந்தனை மேலோங்கும். தெய்வீக காரியங்களால் ஓரளவுக்கு சுகம் மற்றும் சந்தோஷத்தை கொடுக்கும். மனைவியின் உதவியைப் பெறுவீர்கள். இன்று ஓரளவு பணவரவு இருக்கும். வாகன யோகம் உண்டாகும். பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் கிடைக்கும். எதிலும் தயக்கமும் பயமும் ஏற்படாது.
இன்று தொழில் வியாபாரம் நல்லபடியாகவே நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.வாக்கு வன்மையால் லாபமும் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் கூட சாதகமான பலனையே இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். கூடுமானவரை குடும்பத்தாரிடம் கோபப்படாமல் நடந்துகொள்ளுங்கள்.
அக்கம்பக்கத்தினருடன் அன்பாக பேசுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை.