Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு… தடங்கல் உண்டாகலாம்…பொறுமை தேவை…!

ரிஷப ராசி அன்பர்களே …!   இன்று பிள்ளைகளால் சந்தோஷம் குறையும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் நல்ல பெயர் கிடைக்காது. பயணிகள் செல்வதாக இருந்தால் கொஞ்சம் தள்ளிப் போடுவது நல்லது. வெற்றிக்கு வழி இல்லாத வகையில் சில மாற்றங்களும் நிகழும் பார்த்துக்கொள்ளுங்கள். சீரான பலனை காண்பதற்கு இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறு சிறு தடங்கல்கள் வந்து சேரும்.

தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். விடாமுயற்சியுடன் தான் இன்று காரியங்கள் செய்ய வேண்டும். உழைப்பு அதிகமாக இருக்கும். தூரமான பயணமாக செல்ல வேண்டுமென்றால் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும்போதும் பொறுமையாக செல்லுங்கள். உடல் நலத்தை பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். தொடர்ந்து நல்ல பலனை பெறுவதற்கு மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கையாக இருங்கள்.

கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் தான் உங்களுக்கு கொஞ்சம் கோபத்தை தூண்டுவதாக அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிற ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பிரவுன்

Categories

Tech |