ரிஷப ராசி அன்பர்களே …! இன்று வரவுக்கு மிஞ்சிய சமாளிக்க முடியாத அளவுக்கு செலவுகள் ஏற்படும். கருத்து வேறுபாடுகளை தவிர பிறர் விவகாரங்களில் தயவுசெய்து மூக்கை நுழைக்க வேண்டாம். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப் படாமல் இருப்பது நல்லது. உங்களுடைய செயலில் இன்று வேகம் அதிகமாக இருக்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மற்றவர்கள் நலனில் அக்கறையுடன் கவனித்துக் கொள்வீர்கள். வீண் அலைச்சலும் இருக்கும். கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதங்கள் செய்யாமலிருப்பது நல்லது. அதேபோல திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் இருக்கும்.
இன்று இறை வழிபாட்டுடன் தொடங்குங்கள் அனைத்து விஷயங்களும் முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.