Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…பொறுப்புகள் அதிகரிக்கும்…ஆர்வம் அதிகரிக்கும்…!!

 

ரிஷபம் ராசி அன்பர்களே …!!  இன்று உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாளாக இருக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும்.வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும்.

மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் ஏற்படும். எதிர்பாராத உதவியால் நன்மை ஏற்படும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். வீண் அலைச்சல் வீண் பயம் இன்று விலகிச் செல்லும்.  பெரிய பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

காதலர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |