ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும் நாளாகவே இருக்கும். வாகன யோகம் உண்டாகும். கடந்த சில நாட்களாக சிரமப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். முக்கியமான வேலைகளில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு தான் சரியாகும். வீண் பிரச்சனைகளை கண்டு ஒதுங்கி சென்றுவிடுங்கள்.
முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாகத்தான் வந்து சேரும். கவலை வேண்டாம். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும், ஒரு சில வேளைகளில் அவசரமாக முடிவு எடுப்பதில் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் சொல்வதை நீங்கள் கூர்ந்து கவனியுங்கள், அவர்களிடமிருந்து உங்களுக்கு உதவிகளும் கிடைக்கும்.
வெளியூர் பயணம் உங்களுக்கு ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு சாதத்தை அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்