Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கான சித்திரை மாத பலன்…70% நன்மைகள் நடக்கும்… எடுத்த காரியம் தடைபடும்..!!

ரிஷபம் ராசி சித்திரை மாத ராசி பலன்..! கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு இந்த மாத ராசிபலன்களின் அடிப்படையில் இந்த புதுவருடம் சார்பரி வருடம் என்று பெயர். இந்த வருடம் சித்திரை மாதம் தங்களுக்கு எப்படி இருக்கும் மாதத்தில் சுப பலன்கள், சந்திராஷ்டம தினங்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள், இவையெல்லாம் பார்ப்பதற்கு முன்னாடி நம்ம ராசிக்கு அதிபதியான, அதிதேவதையாக விளங்கும் கூடிய தெய்வம் என்று பார்த்தால் சுக்கிர பகவானும் மகாலட்சுமியும்.

என்றைக்குமே இதுதான் உங்களுக்கு தெய்வம். எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் எத்தனை தெய்வம் பிடித்திருந்தாலும், எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் நம்மை காக்க கூடிய நம்ம ராசிக்கு அதிதேவதையான தெய்வம் இவர்கள் தான். நம்ம வீடு இன்றி ஆயிரம் சொந்தக்காரர்களின் வீட்டில் சந்தோசமாக இருந்தாலும் அதாவது உரிமையாக இருந்தாலும் நம்ம வீட்டில் எப்படி சவுகரியமாக இருக்கலாம். அதேபோல் நமக்கு உண்டான தெய்வம் என்று பார்த்தால் சுக்கிரனும், மகாலட்சுமியும் அவர்களை பிரார்த்தனை செய்து இந்த மாத நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார்; அதனால் என்ன ஆகும் என்றால் தகப்பனாருடைய உடல்நலத்திற்கு கொஞ்சம் கேடுவிளைவிக்கும். மருத்துவச் செலவுகள் வரும் இருதய சம்பந்தமான நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசுத்துறை அரசாங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு கொஞ்சம் கடுமையாக பணிச்சுமை அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். மேலதிகாரிகளிடம் என்னதான் கஷ்டப்பட்டு மனசார வேலை செய்தாலும் நமக்கு கிடைக்கக்கூடிய பலன் என்று பார்த்தால் நன்மையான பலனாக இருக்காது.

யாராவது எதையாவது போட்டு கொடுத்து விடுவார்கள். நாம் வாங்கக்கூடாது என்று நினைத்த கெட்ட பெயர் வாங்க கூடும். அரசுத்துறை அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளிடம் வேலை செய்தவர்களுக்கு அரசிடம் நமக்காக வேண்டிய காரியங்களும் தள்ளி தான் போகும். பென்சன் வரவேண்டியது, கோர்ட் கேஸ் பிரச்சினை எத்தனையோ இருக்கிறதல்லவா அதெல்லாம் நமக்கு வரவேண்டி இருந்தாலும் இந்த மாதத்தில் அது நடக்கக் கூடிய வாய்ப்பு கிடையாது. முக்கியமாக தகப்பனாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தகப்பனாருடைய சொத்துக்களை சூழ்நிலை ஏற்படும்.

11-ஆம் இடம் லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய புதன் இருக்கிறார்; மீனத்தில் குரு உடைய வீட்டில் மிக சிறப்பான யோகம்,  சுய தொழில் லாபம் பொருளாதாரத்தில் வளர்ச்சி பங்கு வர்த்தகம் அதிகரிக்கும். வெளிநாட்டு வியாபாரங்கள், உள்நாட்டு வியாபாரங்கள் வெளிமாநில வியாபாரங்கள், ஜவுளி சம்பந்தமான தொழில் செய்கிறவர்கள், நகை சம்பந்தமான தொழில் செய்பவர்கள், தானியங்கள், தோல் வியாபாரம் செய்பவர்களுக்கு மிக சிறப்பான பலன்களை இந்த மாதத்தில் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் கல்வி பயில கூடிய மாணவர்களுக்கு நல்ல கல்வி மேலும் முன்னேற்றம் உயர்கல்வி படிப்பவர்களுக்கு அதற்குண்டான அமைப்புகளும் ஏற்படும். வெளிநாட்டில் கல்வி கற்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் அதற்கான வாய்ப்புகளும் ஏற்படக்கூடிய ஒரு நல்ல மாதமாக இந்த மாதம் விளங்குகிறது.

ராசிநாதன் சுக்கிரன் சஞ்சரிப்பதால்; பலவிதமான நன்மைகள் ஏற்படும். தொட்டது துலங்கும் எதிர்பாராத தனவரவு பழைய கடன்கள் எல்லாம் நிவர்த்தியாகும். நாலு பேருக்கு கடன் கொடுக்கும் அளவிற்கு ஒரு சூழ்நிலை எல்லாம் அமையும். பிக்சர் டெபாசிட் பண்ணலாம், ஆபரணங்கள் வாங்கி வைக்கலாம். பூமி நிலம் வாங்கலாம். குடும்ப ஒற்றுமை மேலோங்கும் கணவன்-மனைவிக்குள் சந்தோசங்கள் பிறக்கும். இனிமையான சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ள கூடிய அமைப்புகளாக, புதிய வண்டி வாகனம் வாங்க கூடிய அமைப்புகள் இது எல்லாம் ஏற்படும். ராசியிலேயே ராசிநாதன் சஞ்சரிக்கும் பொழுது சகலவிதமான நன்மைகளும் மருத்துவச் செலவு குறையும். தகப்பனாருக்கு வரும் உங்களுக்கு இருந்தால் குறையும்.

ராசிக்கு 2ம் இடம் குடும்பம் வாக்கு தனஸ்தானம் ராகு சஞ்சரிப்பதால்; மிக சிறப்பான யோகம்,  உங்கள் குடும்பத்தில் யாராவது இருக்கிறார்கள், திருமணம் நடக்க வேண்டும் அல்லது உத்தியோகம் கிடைக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் நடக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் மூலமாக மகிழ்ச்சிகள் ஏற்படும். வாரிசுகள் மூலமாக நன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு ஒரு மரியாதை உண்டாகும். தனக்கு ஏற்படும் ராசிக்கு எட்டாம் இடம் என்று சொல்லக்கூடிய அஷ்டம ஸ்தானத்தில் சனி கேது அதுதான் இடையூறு. அஷ்டம ஸ்தானம் அஷ்டமச்சனி அதோடு கேதுவும் சேர்ந்து இருப்பதனால் இடமாற்றங்கள் சிலபேருக்கு ஏற்படும். பொருளாதாரத்தில் தடை எதிரிகள் உண்டவர்கள் தேவையில்லாத மனக்குழப்பம் மன சஞ்சலம் அந்த மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் ஏற்படும் சண்டை வர வாய்ப்புகள் உண்டு.

அதனால் பொறுமையாக இருக்க கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும். கேதுவும் இருப்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் ஒன்பதாமிடம் என்று சொல்லக்கூடிய பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் குருவின் சேர்க்கை அதிசாரத்தில் வந்திருப்பதால் பலவிதமான நன்மை. ஓடி  போனவர்களுக்கு ஒன்பதில் குரு என்று சொல்வார்கள். நல்ல லாபகரமான ஸ்தானத்தில் குரு இருக்கிறார். பூமி மனை வீடு உங்கள் பேருக்கு சொந்தமாக வாங்க கூடிய அமைப்புகள் ஏற்படும். பொருளாதாரத்தில் வளர்ச்சி, ஆபரணங்கள் பெருகும், வஸ்திரங்கள் பெருகும், வாகனங்கள் பெருகும். கண்டிப்பாக விவசாயிகளுக்கு ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய ஒரு நல்ல நேரமாக இந்த நேரம் விளங்குகிறது.

பொதுவாக ரிஷப ராசிக்கு இந்த மாதம் ஒரு 70% நன்மைகளை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கல்வி பயில கூடிய மாணவர்களுக்கு 80 சதவீத நன்மைகள், கலைத்துறையினருக்கு அரசியல்வாதிகளுக்கு பெண்களுக்கு 80 சதவீத நன்மைகளும், சுய தொழில் உத்தியோகம் வியாபாரம், விவசாயம் செய்பவர்களுக்கு 90 சதவீத நன்மைகளும் ஏற்படக்கூடிய நல்ல மாதமாக இந்த மாதம் விளங்குகிறது. தங்களுக்கு இந்த மாதத்தில் முக்கியமான பணிகளை தவிர்க்க வேண்டிய சந்திராஷ்டமம் தினம் சித்திரை மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி 40 நிமிடம் முதல் சித்திரை மாதம் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பகல் 2 மணி  39 நிமிடம் வரை இன்று சந்திராஷ்டமம் சஞ்சரிக்கிறது. எனவே அந்த நேரத்தில் முக்கியமான பணிகளை தவிர்த்து இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டமான வண்ணம்:  வெள்ளை

அனுகூலமான திசை:  கிழக்கு-மேற்கு

அதிர்ஷ்டமான எண் : 7

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி

 மகள் லட்சுமி தாயாரை வழிபட்டு இந்த மாதத்தை இனிமையான மாதமாக மாற்றிக்கொள்ளுங்கள்.

Categories

Tech |