Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.. செலவு கட்டுக்குள் இருக்கும்..!!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடினமான வேலைகளை கூட ரொம்ப சுலபமாக செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் அனுகூலம் இருக்கும். இல்லம் கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். சொத்துப் பிரச்சனைகள் அனைத்துமே சுமுகமாக முடிவடையும். இன்றைக்கு மனகுழப்பம் கொஞ்சம் இருக்கும், பார்த்துக்கொள்ளுங்கள்.

செலவை பொருத்தவரை கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கவனமாகத்தான் எதையும் செய்ய வேண்டி இருக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம்.

முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் சிறப்பாகவே இருக்கும். லாபமும் நல்லபடியாக தான் வந்து சேரும். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஓரளவு இன்று சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். இன்று  மாணவச் செல்வங்கள் கல்விக்காக கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை கொஞ்சம் தெளிவாக படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள் அது போதும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |