ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய நல்ல செயல் நண்பர்களிடம் பாராட்டுகளை பெற்று கொடுக்கும். தொழிலில் கடுமையான உழைப்பினால் புதிய சாதனை புரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாகும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசு சார்ந்த உதவிகளும் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுகள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது மட்டும் நல்லது. அடுத்தவரின் உதவியும் உங்களுக்கு கிடைக்கும்.
புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். உங்களுடைய செயல்திறன் இன்று கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கும், திருமணத்திற்கான காத்திருந்தவர்களுக்கும் இன்று சிறப்பான பலனே ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்களால் இன்று முக்கியமான பணி நிறைவேறும். இன்று எதையும் செய்யும் பொழுது கொஞ்சம் ஆலோசனை செய்வது நல்லது.
திட்டமிட்ட காரியங்களை எதிர்கொள்ளுங்கள், கணவன் மனைவிக்கு இடையே பேசும்பொழுது நிதானம் இருக்கட்டும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் கடுமையாக உழைப்பார்கள், சிறப்பான பலனை பெறுவார்கள். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்