Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும்…பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.  புது மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். இன்று உங்களுடைய திறமையான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும்.

எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் கூடும். மனமகிழ்ச்சி ஏற்படும் படி சிறப்பான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியம் நல்லபடியாகவே இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் மனதிற்கு திருப்தியைக் கொடுக்கக் கூடிய விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும்.

இன்று மாணவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் நன்மைகள் ஏற்படும். கல்வியில் உங்களுடைய திறமை மேம்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லை இன்று  சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |