ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாகவே இருக்கும். உங்களுடைய செல்வநிலை உயரும், பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதியை கொடுக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வந்து சேரும். சரக்குகள் வருவதும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சலும் ஏற்படும், கவனமாகவே இருங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும், அலுவலகத்தில் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். நிதானத்தை மேற்கொள்ளுங்கள். தனவரவு கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டாலும் கையில் வந்து சேரும்.
இன்று மாணவர்கள் மாணவர்களுக்கு கல்வியில் எந்த பிரச்சனையும் இல்லை, ரொம்ப சிறப்பான முன்னேற்றம் இருக்கிறது. ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறம்