பிரிட்டன் பட்ஜெட்டில் செவிலியர்களுக்கு சாதகமாக ஒன்றும் அமையவில்லை என்று இலங்கையைச் சேர்ந்த பெண் குரல் கொடுத்துள்ளார்.
இலங்கை தமிழரான அழகிய இளம்பெண் ரெபேக்கா தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார். இவரை அழகிய இளம்பெண் என அழைக்க காரணம் அவர் இங்கிலாந்து அழகிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இவர் லண்டன் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடுமையான பக்தி கொண்ட இவர் ஒரு நடனக் கலைஞரும் ஆவார்.அவர் ஏற்கனவே அளித்திருந்த பேட்டியில் தான் அழகிப்போட்டியில் வெற்றி பெற்றால் குழந்தைகளின் மன நலனுக்காகவும், செவிலியர்கள்காகவும் குரல் கொடுப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் அந்நாட்டின் பட்ஜெட் பற்றி பிரிட்டனின் அரசியல் தலைவர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் செவிலியர்களின் ஊதியம் குறித்து எந்தவித தகவல்களும் குறிப்பிடப்படவில்லை. இதனைக் கண்ட ரெபேக்கா பட்ஜெட்டுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் இந்த கொரோனா காலங்களில் செவிலியர்கள் கடுமையாக பணியாற்றினோம். ஆனால் எப்போதும் போல் எங்களுக்கு எந்தவித ஊதிய உயர்வு இல்லை எங்கள் உழைப்புக்கான பலன் கொரோனாவிற்கு பிறகாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது அந்த எதிர்பார்ப்பு தவறானது என்பதை புரிந்து கொண்டேன். செவிலியர் பணி என்பது என் தொழில் அதை நான் பெரிதும் நேசிக்கிறேன். ஆனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியத்தை தரவேண்டும் என்பதே என் கோரிக்கை என கருத்து வெளியிட்டுள்ளார்.