இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கிற்கு எதிராக ஜி 20 மாநாட்டில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமரான ரிஷி சுனக், டி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு சந்தித்தால் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான பின் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திப்பது இது தான் முதல் தடவையாகும்.
இதற்கு முன்பு அவர் தெரிவித்திருந்ததாவது, ரஷ்ய அதிபரின் போரால், உலக நாடுகள் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உயிர்கள் அழிந்துள்ளது. வழக்கமாக நடப்பது போல் ஜி 20 உச்சி மாநாடு இருக்காது. சர்வதேச ஒத்துழைப்பு, மரியாதை போன்றவற்றிற்காக ரஷ்ய அதிபரை நீக்க ஜி-20 ஆகிய இறையாண்மை மன்றங்களை அழைப்போம்.
எங்களின் நட்பு நாடுகளோடு சேர்ந்து, வருங்காலத்தில் இருக்கும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள, மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற, ஒன்றாக செயல்படுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.