பிரிட்டனின் பிரதமர் வேட்பாளராக இருக்கும் ரிஷி சுனக் தன் குடும்பத்தை பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டன் நாட்டின் பிரதமர் போட்டியில் இருக்கும் ரிஷி சுனக், தன் மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து கூறியிருக்கிறார். அதன்படி இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியினுடைய மகள் அக்ஷதா மூர்த்தியை, ஒரு பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாக கூறியிருக்கிறார்.
அப்போது தங்களுக்குள் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. நான் பொருட்கள் அனைத்தையும் மிக அழகாக அடுக்கி வைப்பேன். என் மனைவி எனக்கு நேர்மாறாக, பயங்கரமானவள். நான் இப்படி கூறுவதை அவள் விரும்பமாட்டாள் என்று தெரியும். ஆனால் உண்மையை கூற நினைக்கிறேன்.
பொருட்களை சரியாக அடுக்கி வைப்பதில் அவள் மிகவும் மோசம் என்று கூறியிருக்கிறார். மேலும், தன் குழந்தைகளான கிருஷ்ணா மற்றும் அனௌஷ்கா இருவரும் பிறந்த சமயத்தில் சொந்த தொழிலில் ஈடுபட்டிருந்தேன். எனவே அவர்களுடன் அதிகமாக இருக்க முடிந்தது. அதனை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் எங்காவது குழந்தையை பார்த்துவிட்டால் உடனே அந்த குழந்தையை தூக்குவதற்கு என் கைகள் நீண்டு விடும் என்று கூறியிருக்கிறார்.