Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராகும் நாராயண மூர்த்தியின் மருமகன்!

தொழிலதிபரும் இன்போசிஸின் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்கை பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்துள்ளார்.

நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இன்போசிஸும் ஒன்று. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி ஆவார். இவரின் மகளான அக்சதாவுக்கும் பிரிட்டன் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்குக்கும் 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ள ரிஷி சுனக் முதலீட்டு வங்கி ஆலோசகராக பணியாற்றிவந்துள்ளார்.

Image result for Rishi Sunak

2014ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்ட வந்த இவரை பிரிட்டன் நிதியமைச்சராக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது நியமித்துள்ளார்.

Image result for Rishi Sunak

Categories

Tech |