பிரிட்டன் நாட்டின் பிரதமராக போகும் வாய்ப்பை இழந்தால் சேன்ஸலர் ரிஷி சுனக் நாட்டிலிருந்து வெளியேறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
பிரிட்டனின் சேன்ஸலரான ரிஷி சுனக், அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்று விடுவார் என்று அவரின் நண்பர் கூறியிருக்கிறார். அவருக்கு கலிபோர்னியா மாகாணத்தில் Santa Monica என்ற பகுதியில் 5.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீடு இருக்கிறது.
ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டில் பிரதமராவதற்கு உண்டான முயற்சிகளில் தோல்வியை சந்தித்தால் நாட்டிலிருந்து வெளியேறி Silicon Valley-ல் வேலைக்கு செல்வதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அவரின் மனைவியின் வரி ஏய்ப்பு பிரச்சனை விவாதிக்கப்படுவதற்கு முன் அடுத்த பிரதமர்களின் பட்டியலில் முன்வரிசையில் இருந்தார்அவர் .
மேலும், அவர் தன் மனைவி பிரச்சனையில் சட்டத்தை உறுதியாக கடைப்பிடிப்பதாக தெரிவித்திருக்கிறார். தன் மனைவியின் இந்த விவகாரம் எப்படி வெளியில் தெரிந்தது, தனக்கு அரசியல் சிக்கலை உண்டாக்கியது? என்பது குறித்து விசாரணை மேற்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.