Categories
உலக செய்திகள்

பிரதமர் தேர்தல்… ரிஷி சுனக்கிற்கு குறைந்த வெற்றி வாய்ப்பு…. பிரச்சாரத்தில் பேசியது தான் காரணமா?…

பிரிட்டனில் பிரதமர் தேர்தல் நெருங்கும் நிலையில், ரிஷி சுனக், பிரச்சாரத்தில் கலிபோர்னியா மாகாணத்தை குறிப்பிட்டு பேசியதால் வெற்றிக்கான வாய்ப்பு அவருக்கு குறைந்ததாக கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டின் ஈஸ்ட்போா்ன் என்ற பகுதியில் இம்மாதம் 5-ஆம் தேதி அன்று கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே ரிஷி சுனக் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவரிடம் நீங்கள் இளம் பட்டதாரியாக இருந்தால் உங்களின் வாழ்கையை எவ்வாறு அமைப்பீர்கள்? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர், அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஸ்டான்ஃபோா்டு எனும் பல்கலைக்கழகத்தில் 2004 ஆம் வருடத்தில் இருந்து 2006ம் வருடம் வரை படித்த போது ஏற்பட்ட நினைவுகளை பகிர்ந்தார்.

அப்போது, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் வசித்த காலங்கள் உத்வேகம் மற்றும் அதிகாரத்தை தந்தாக கூறினார். மேலும், நான் தற்போது இளம் வயதினராக இருந்தால், அங்கு சென்று ஏதேனும் செய்வேன் என்று கூறினார். அவர் பேசிய 10 நிமிடங்களில் மூன்று தடவை கலிபோர்னியா மாகாணத்தின் பெயரை கூறினார்.

இது அவரின் ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை தந்தது. மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்களுடன் அவர் தொடர்பில் இல்லை. எனவே இவ்வாறு கூறுவதாக சென்ட்ரல் லண்டனில் இருக்கும் அவரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |