புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல் துறையினருக்கு தன்னார்வலர்கள் மதிய உணவு வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளதால் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் தன்னார்வலர்களான தாஜ்கஹால் ஹாஜி உபைத்துல்லா மற்றும் ஆடிட்டர் ஹாஜிஇப்ராஹிம் ஆகியோர் அன்னவாசல் அப்துல் அலி மூலம் கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்களை காக்க தங்கள் உயிரை பணையம் வைத்து காவல் பணியில் ஈடுபடும் காவல் துறையினரை மதிக்கும் வகையில் அப்பகுதியிலுள்ள காவல் துறையினருக்கு மதிய உணவை வழங்கியுள்ளனர்.