ரிது வர்மா சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிது வர்மா ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபல கதாநாயகி ஆனார். இந்த படத்திற்கு முன்பாக இவர் சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தில் மூலம் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.
இந்நிலையில், இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினர் விரைவில் வெளியிடுவர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.