ஆர். ஜே. பாலாஜி தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவர் ”எல்கேஜி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகையான நயன்தாரா உடன் இணைந்து ”மூக்குத்தி அம்மன்” என்ற பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தார்.பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ என்ற காமெடி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க இருக்கிறார். ‘வீட்ல விசேஷங்க’ என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார், அதில் “நாங்கள் சினிமா பைத்தியம். எங்கள் குடும்பம் ஒரு நாளைக்கு 3 படம் பார்ப்போம். எங்க அம்மா தான் எங்களை கூட்டிட்டு போவாங்க. தீபாவளினா அம்மா குளிக்க வைச்சி புது டிரஸ் போட்டு ஸ்வீட் பண்ணி தருவாங்க. ஆனால் எங்க அம்மா உதயம் தியேட்டருக்கு கூட்டிட்டு போவாங்க. அப்போது தளபதி படத்திற்கு பத்தரை மணிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே குணா படத்திற்கு போனோம். 2 மணிக்கு அடிச்சு புடிச்சு தளபதி படத்திற்கு டிக்கெட் வாங்கி பார்த்தோம். ஆறு மணிக்கு சின்ன கவுண்டர் பார்த்தோம். இப்படி ஒரே நாளில் 3 படம் பாக்குற அளவுக்கு என் குடும்பம் ஒரு சினிமா பைத்தியம் குடும்பம்” என்று ஆர்ஜே பாலாஜி கலகலப்பாக பேசி உள்ளார்.