Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்.கே.சுரேஷின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி…. பங்கேற்ற திரை பிரபலங்கள்…. வெளியான புகைப்படம்….!!!!!

பாலா இயக்கிய தாரை தப்பட்டை எனும் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானவர் தான் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து அவர் மருது, இப்படை வெல்லும், ஸ்கெட்ச், விருமன், பட்டத்து அரசன் உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் ஆர்.கே.சுரேஷின் மனைவியான மாதவிக்கு சென்னையில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சியானது நடந்தது.

இந்நிகழ்ச்சியில் டைரக்டர் மிஷ்கின், நடிகர்கள் கவுதம் கார்த்திக், விமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்பட பெரும்பாலானோர் பங்கேற்றனர். தற்போது இது குறித்த புகைப்படங்களை ஆர்.கே.சுரேஷ் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |