நாய் குறுக்கே சென்றதால் கேஸ் சிலிண்டேர் கம்பெனி ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அழகிச்சிப்பட்டியை சார்ந்தவர் சுதாகர். இவர் தனியார் கேஸ் சிலிண்டர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சுதாகர் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது நாய்தான்ப்பட்டி என்னும் ஊருக்கு அருகில் நாய் ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்தது. இதில் சுதாகர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
பின்பு அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.