வேன் – இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் பாவூர் சத்திரம் பகுதியில் நடைபெற உள்ள நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை அதே பகுதியில் வசிக்கும் சேகர் என்பவர் ஓட்டியுள்ளார்.
இதனை அடுத்து வேன் நாச்சியார்புரம் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.