அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பஞ்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ராஜகோபால் திருச்சுழி சாலையில் இருக்கும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜகோபாலின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜகோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.