நாமக்கல்லில் ஆட்டோ மீது சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் சம்பவ இடத்திலே பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் இருக்கும் காவேரி நகர் பகுதியில் சந்திரா என்பவர் தனது மகனுடன் வசித்து வந்தார். மேலும் சந்திரா பல் வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக வட்டமலைப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றவுடன் வீட்டிற்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ குமாரபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது சாலையை கடக்கும் முயன்ற ஆட்டோ மீது திடீரென சரக்கு லாரி எதிர்பாரத விதமாக மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சந்திரா உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில்இருந்த மற்ற நபர்கள் படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இவ்விபத்திற்கு காரணமான லாரி டிரைவரை காவல் துறையினர் கைது செய்தனர்.