கார் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி கிராமத்தில் பழனிசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி செல்வம் அப்பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் பழனி செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனி செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய பரமசிவம் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.