இருசக்கர வாகனம் – லாரி மீது மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலடிப்பட்டி பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான கருப்பசாமி பாண்டியன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி பாண்டியன் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சுழி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் கருப்பசாமிபாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமி பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.