சாலை விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையை காண்பதற்காக செந்நெல்குடிக்கு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காற்று பன்றிகள் காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இதில் காளிமுத்து நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.