வேன் மோதி மத்திய காவல் படை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவரம்பட்டி பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெல்லியில் உள்ள மத்திய காவல் படை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருக்கிறார். இவர் சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் 13 – ஆம் தேதியன்று பால்பாண்டி மற்றும் மணிமேகலை இருவரும் இருசக்கர வாகனத்தில் குலதெய்வம் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பால்பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் பால்பாண்டியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பால்பாண்டியன் பரிசோதித்து பார்த்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பால்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேன் டிரைவரான கஜேந்திரன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.