இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் மகேஷ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் மகேஸ்வரனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்ததும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.