Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் என்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வழுதலங்குணம் கிராமத்தில் விவசாயியான விஜயசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது பிரதீஷ்க்கு பங்களாதேசத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால் பிரதீஷ் சென்னையிலிருந்து தனது சொந்த கிராமத்தில் இருக்கும் குடும்பத்தினரை பார்க்க வந்துள்ளார்.

இதனை அடுத்து பிரதீஷ் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு நாய் குறுக்கே வந்து ஆட்டோ கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பிரதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ஆனால் ஆட்டோ ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரிதிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |