பேருந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பேருந்தில் திருமண கோஷ்டியினர் கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். காசர்கோடு மாவட்டம் ராஜபுரம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின் சாலையோரம் உள்ள பள்ளதினுள் விழுந்த பேருந்து அங்கிருந்த வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது.
இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.