இருசக்கர வாகனத்தில் லாரி மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் ராமன் மற்றும் அஸ்வின் இருவரும் இருசக்கர வாகனத்தில் பொருட்கள் வாங்க ராஜபாளையத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது பஞ்சு மார்க்கெட் பகுதியில் எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அஸ்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் ராமர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் ராமரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரான முருகேசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.