சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியறை பகுதியில் சர்புதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி டிரைவரான அசுருதீன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூரில் லாரி டிரைவராக வேலை பார்த்துள்ளார். கடந்த 3 மாதங்களாக தனது தாயாரான மெகருன்னிசாவுடன் புளியறையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அசுருதீன் சம்பள பாக்கியை வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு சென்றுள்ளார்.
அப்போது விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் சாலை விபத்தில் நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அசருதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசருதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.