Categories
மாநில செய்திகள்

“சாலை விழிப்புணர்வு பாடல்”…. சிறுமியை கண்டுபிடித்து வாழ்த்திய டிஜிபி…. குவியும் பாராட்டு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி சமீரா ஜாய்ஸ். இந்த சிறுமிக்கு தற்போது 12 வயது ஆகும் நிலையில், கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கானா குரலில் சாலை விழிப்புணர்வு பாடலை பள்ளி சீருடையில் பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு, கானா குரலில் பாடி அசத்திய சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமீரா ஜாய்ஸ் என்பது தெரியவந்ததால், டிஜிபி சைலேந்திரபாபு சிறுமியை சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் சிறுமியை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணமாக இருக்கிறது.

 

Categories

Tech |