Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரோடு ரோலர் மோதி….. அம்பேத்கார் சிலை சேதம்….. கடலூர் அருகே பரபரப்பு….!!

கடலூர் அருகே ரோடுரோலர் மோதி அம்பேத்கர் சிலை சேதமானதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சென்னை செல்லும் பசாலை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. தற்போது அங்கே சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,

நேற்றைய தினம் பணியின்போது ரோடுரோலர் தவறுதலாக மோதியதில்  அம்பேத்கர் சிலையின் கைவிரல், அதன்பீடம் சேதமடைந்து இரும்பு கூண்டும் தகர்ந்தது. இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதியில் பொதுமக்கள் திரள உடனடியாக காவல் துறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின் ரோடு ஒப்பந்ததாரர் சேதமான சிலையை சரி செய்வதாக உறுதி அளித்த பின் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் ஏராளமான காவல்துறையினர்  அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |