Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே தெரிஞ்சிக்கோங்க….. இனி எல்லாம் ஆன்லைன் தான்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சாலை விதிமுறைகள் தொடர்பான சில விஷயங்களை ஆன்லைன் மூலம் கையாள முடிவு செய்துள்ளது. 

வாகன ஓட்டிகளின் லைசன்ஸ், பெர்மிட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஆன்லைனில் பராமரிக்கும் புதிய விதிமுறைகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அமல்படுத்தவுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் செய்யும் விதிமீறல்கள், அவர்கள் ஏற்படுத்தும் விபத்துகள், உள்ளிட்டவைகளும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சட்டம் கடுமையாக்க படுவதால், பொதுமக்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பார்கள். அதேபோல் காவல்துறை தரப்பிலும் அடிக்கடி வைக்கப்படும் குற்றச்சாட்டான லஞ்சம் முறை ஒழிக்கப்படும். அனைத்தும் ஆன்லைனில் தரவேற்றம் செய்யப்படுவதால் குற்றங்கள் குறைந்து சட்ட ஒழுங்கு நிலை நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |