சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் நாளை களமிறங்க இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது
சாலை பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இன்றைய காலகட்டத்தில் இருந்து வருகிறது அதிகப்படியான மரணங்கள் சாலை விபத்துகளினால் நேர்ந்து வருகிறது இந்நிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் உலக தொடர் டி20 போட்டி ஒன்று நடத்த உள்ளனர். சச்சின் மட்டுமல்லாது அனைவருக்கும் பிடித்த கிரிக்கெட் வீரர்களை டி20 டோர்னமெண்டில் பார்க்க போகிறோம். இந்த டோர்னமெண்டில் பெரிய பெரிய வீரர்கள் எல்லாம் விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உள்ளனர்.
இந்த தகவல் அறிந்ததிலிருந்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாகி மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதில் இந்திய அணியில் விளையாட போகும் சிறந்த வீரர்களான 12 பேரை தேர்ந்தெடுத்து கூறியுள்ளனர். மொத்தம் 5 நாடுகளான இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஐந்து நாடுகளில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்கள் விளையாட உள்ளனர். இதற்கு “ROAD SAFETY WORLD SERIES 2020” என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் போட்டி நாளை மும்பையில் உள்ள மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.