நீங்கள் சாலையில் பயணம் செய்யும்போது அதன் ஓரத்தில் மஞ்சள் நிறத்தில் குட்டி டப்பா போன்ற ஒன்று பதிக்கப்பட்டிருக்கும். இதனை ஏன், எதற்காக வைத்திருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா….? இதன் பெயர் ROAD STUD. இதில் இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று அதன்மேல் ஒளி படும்போது அதை எதிரொலிப்பது மாதிரியாக இருக்கும். இதன் விலை 100 லிருந்து 200 வரை இருக்கும்.
மற்றொன்றின் விலை 1௦௦௦தில் இருந்து 1500 வரையில் இருக்கும். இந்த ROAD STUDல் ஒரு solar panal, LED light, sensor, battery மாதிரியான நிறைய பொருட்கள் இருப்பதினால் இதன் விலையும் பயன்படுத்தும் விதமும் அதிகம் என கூறப்படுகிறது. இந்த ROAD STUD இரவு நேரங்களில் தானாகவே அதிலிருக்கும் சென்சர்ஸ் மூலியமாக ON ஆகும். இந்த ROAD STUD சாலையில் பயணம் செய்கிற எல்லா ஓட்டுனருக்கும் சாலையின் பாதையை தெளிவாக காண்பிக்கும். அதனால் அடுத்த தடவை நீங்கள் சாலையில் பயணம் செய்யும்போது இந்த ROAD STUDடை கவனித்துப் பாருங்கள்.