நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் முதுகுலா, தங்காடு, காத்தாடிமட்டம் போன்ற பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் மணியட்டி கிராமத்தில் இருந்து செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து அங்கு பெய்த கனமழை காரணமாக மணியட்டி-தங்காடு சாலையோரத்தில் விரிசல் ஏற்பட்டதால் சாலை முழுவதும் துண்டிக்கும் அபாயம் உள்ளது. எனவே விரிசல் பெரிதாகி விடாமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.