கோவைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள் :
கோவைக்காய் – 1/4 கிலோ
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – காரத்திற்கேற்ப
சீரகக்தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கோவைக்காயை நறுக்கி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசிறி கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கோவைக்காயை போட்டு வதக்கி, வெந்தவுடன் இறக்கினால் கோவைக்காய் வறுவல் தயார் !!!