Categories
உலக செய்திகள்

ஆஹா…! என்ன ஒரு பிரம்மாண்டம்…. “ரொம்ப ரிஸ்க் எடுத்து கிளிக் பண்ணது”…. கடலுக்கு அடியில் அபூர்வ மீன்கள்….!!

கடலுக்கடியில் காணப்பட்ட அரியவகை மீன்களை ஆராய்ச்சியாளர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

பாண்டம் என்று கூறப்படும் அரியவகை ஜெல்லி மீன்கள் (Jelly fish) 1899 ஆம் ஆண்டில் அதிகளவு அமெரிக்காவின் கடற்பகுதிகளில் காணப்பட்டுள்ளன. இவைகளின் கால் இழைகள் 33 அடி நீளம் உடையது. இது பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். தற்பொழுது கலிபோர்னியாவில் உள்ள மாண்டரே வளைகுடாவில் சுமார் 3200 அடி ஆழத்தில் பாண்டம் ஜெல்லி மீன்கள் சுற்றி திரிந்துள்ளன.

இவற்றை ரோபோக்களின் உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறியதில் “இந்த ராட்சத  மீன்கள் ஆர்டிக் பகுதியினை தவிர்த்து மற்ற அனைத்து கடல்களிலும் இருக்கின்றன” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |